MARC காட்சி

Back
திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருக்கடிகை யோகநரசிம்மப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a சோளசிம்மபுரம், சோளிங்கர், கடிகாசலம்
520 : _ _ |a ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம். கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார். மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள். அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார். இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாளமாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும் அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை. அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும். ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், பேயாழ்வார், தொண்டை நாட்டுத் திருத்தலம், அழகிய சிங்கர், நரசிம்மர், திருமங்கையாழ்வார், சோளிங்கர், சோழசிம்மபுரம், சோளபுரம், அரக்கோணம், வேலூர் மாவட்டம், கடிகாசலம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பல்லவர், சோழர், விசயநகரர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 13.1031501
915 : _ _ |a 79.4266712
916 : _ _ |a யோக நரசிம்மர்
917 : _ _ |a பக்தவத்சலப் பெருமாள் (தக்கான்)
918 : _ _ |a அம்ருதவல்லி
923 : _ _ |a அம்ருத தீர்த்தம், தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி
927 : _ _ |a சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர். சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது. இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.
930 : _ _ |a சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற ஆவலால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள் ஏன் இம்மலையைத் தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில் தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால் இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர். இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம் வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான். நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார். இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீகம்.
932 : _ _ |a இக்கோயில் கருவறை விமானம் ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும். யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a ஆஞ்சநேயர் கோயில், லெட்சுமி நரசிம்மர் கோயில், ஆதிகேசவப் பெருமாள் கோயில்
935 : _ _ |a இத்திருத்தலம் அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 வரை
937 : _ _ |a சோளிங்கர்
938 : _ _ |a அரக்கோணம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a அரக்கோணம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000217
barcode : TVA_TEM_000217
book category : வைணவம்
cover images TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

cg103v017.mp4

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0006.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0007.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0008.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0009.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0010.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0011.jpg

TVA_TEM_000217/TVA_TEM_000217_திருக்கடிகை_யோகநரசிம்மப்பெருமாள்-கோயில்-0012.jpg